பெருமை தான் என்னவோ..!??

கயல் தோற்க வைக்கும் விழிகள்;

வீணை பிடித்திருக்கும் விரல்கள்

 

மிதக்கும் மிதவா கூந்தல்;

நூலிடை போர்த்திய ஆடை!

 

கல்லாய் இருந்தவளுக்கு –

கர்வத்தையும் வெட்க்கத்தையும்

கலப்படமில்லாமல் கலந்து

உயிராய் செதுக்கினேன்…!!

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு..!!!

 

இன்றவளை..

ஊனமாக்கி விட்டு

உற்றார் (!) பெயருடன் தன் பெயரை

எழுதி விட்டுச் சென்றானவன்..!!

 

பெருமை தான் என்னவோ..!??